
புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் சென்னை அணி கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூ பிரிவு எஸ்.பி., சம்பத் குமார் அளித்த அறிக்கையில் தொடர்பு உள்ளது என, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த முகுல் முக்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட புக்கி உத்தம் ஜெயின், தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவின் தொடர்பு பற்றி கூறியுதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியடைய தோனி ஒப்புக்கொண்டதாகவும் முக்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


![]()
