ஒருநாள் போட்டிகளிருந்து டோனி விலகல்! கேப்டனாக கோஹ்லி நியமனம்!

Dhoni out of Asia Cup with side strain

பிப்ரவரி 21: காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக விராட் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் வங்கதேசத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக கேப்டன் டோனி தொடரிலிருந்து விலகியுள்ளார்.

கேப்டன் பொறுப்பை விராட் கோஹ்லி பார்ப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு