manmohan-singh-rahul-gandhi

மார்ச் 27, புதுடில்லி: லோக்சபா தேர்லுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. இதில் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம், மற்றும் பல்வேறு நலத்திடங்கள் செயல்படுத்தப்படும் உறுதி ஆகிய அடங்கியிருக்கின்றன. மக்களின் குரலே எங்களின் வாக்குறுதிகள் என்று கோடிட்டு காட்டப்பட்டுள்ளது . கடந்த சில மாதங்களாக ராகுல் மக்களிடம் கலந்துரையாடல் நடத்திய போது கேட்கப்பட்ட யோசனைகள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்தார்.

இந்த கட்சியில் தேர்தல் அறிக்கை விவரம் வருமாறு:

  • நாட்டின் வளர்ச்சியை 8 சதவீதத்திற்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள்
  • ராணுவத்தினருக்கு தேசிய ஆணையம்
  • 125 பேர் கொண்ட பகுதிகளில் சாலைகள் அமைக்க உறுதி
  •  இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினரை அடையாளம் காண ஆணையம்
  • மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற முழு முயற்சி
  •  ஊழல் ஒழிப்பு மசோதா பலப்படுத்தப்படும்
  • ஊழலற்ற ஆட்சி தருவோம்
  • வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம்
  • அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்குதல்
  • உற்பத்தி பெருக்கம்
  • 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
  • இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சி
  • கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 1 டிரில்லியன் டாலர் முதலீடு
  • அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான செயல்பாடு
  • ஏழைகள் அனைவருக்கும் வீடு
  • கறுப்பு பணம் மீட்பில் சிறப்பு தூதுவர் நியமனம்
  • குறைந்த வருமானம் உள்ளவர்களை காத்திட பொருளாதார ரீதியாக நிவாரணம்
  • முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதியம்
  • ஒரு பால் உறவு சட்ட விரோதமல்ல என அறிவிக்கப்படும்
  • மீன் வளத்துறைக்கு தனி அமைச்சகம்
  • பெண்களுக்கு மருத்துவமனைகளில் ஆலோசனை மையம்
  • பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும்
  • 10 லட்சம் பேர் வசிக்கும் பகுதியில் அதிவேக ரயில்கள்
  • தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள்
  • அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வழிவகை
  • சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை
  • நில ஆவணங்கள் கணினி மயம்
  • இலங்கை தமிழர் வளர்ச்சிக்கு உதவி,
  • இலங்கையில் மனித மீறல் குறித்த விசாரணைக்கு முயற்சி.

மொத்தம் இந்த தேர்தல் அறிக்கை 50 பக்கங்கள் கொண்டதாக அமைந்துள்ளது.

Loading