கீரைகளும் அதன் பயன்களும் !

keeraiyo_keerai1

மார்ச் 20, நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளது என்பது கசப்பான உண்மை. ஆனால் இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.

மருத்துவரை அணுகாமல் இருக்க என்ன செய்யனும். நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை நாட வேண்டிய அவசியமில்லை.

முதலில் கீரை வகைகளை பார்க்கலாம்.கீரைகளை சுத்தமான நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைத்தால் சிறந்தது. பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறு சிறு பூச்சிகள் அதிகம் இருக்கும். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

தூதுவளை  கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும்.

அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும்.

கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும்.

சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும்.

புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும்.

கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.

ஆகவே கீரைகளை அதிக அளவில் உட்கொண்டு நலமுடன் வாழ்வோம்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு