குடந்தை பள்ளி விபத்து- 10ம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி!

ஜூலை17, கடந்த 2004 ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்தக் குழந்தைகளின் நினைவுதினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

fire

அந்த வகையில் வழக்கம் போலவே 10 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கும்பகோணம் பாலக்கரையில் கட்டப்பட்ட நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பள்ளி முன் தொடர் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று, மாலையில் கிருஷ்ணா பள்ளியிலிருந்து 94 அகல் தீபங்களை நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் மோட்சதீபம் ஏற்றினர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு