
குழந்தைகளுக்கு யாகூ, டுவிட்டர், ஹாரிபாட்டர் போன்ற பெயர்களை சூட்ட மெக்சிகோவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டின் வடமேற்கில் உள்ள சோனோரா மாநில மக்களுக்கு இத்தகைய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
டுவிட்டர், யாகூ, ஹாரிபாட்டர், ஜேம்ஸ்பாண்ட், ராம்போ உட்பட 61 பெயர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி வர்ஜின், ஹிட்லர், ஈமெயில், பர்கர் கிங், கிறிஸ்துமஸ் டே, ரோபோ காப் மற்றும் ரோலிங் ஸ்டோன் போன்ற பெயர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சோனோரா சிவில் பதிவு இயக்குனரான கிறிஸ்டினா ரமிரெஸ் , இது குழந்தைகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்றும், பள்ளிகளில் இந்த பெயர்களை கொண்ட குழந்தைகள் கேலி செய்யப்படுவதை தடுப்பதற்காகவும் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதவிர ஆட்சேபனைக்குரிய பெயர்களை அதிகாரிகள் கண்டறியும் பட்சத்தில் பட்டியல் விரிவாக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.
![]()
