ms-dhoni

புதுடெல்லி, இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவர் வகித்து வந்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

எனினும், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டி தொடர்களுக்கான தேர்வில் அவர் இடம் பெறுவார். இந்த தகவல் மூத்த தேர்வு குழுவிற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக விளையாடியுள்ள கேப்டன் தோனி, இதுவரை 72 டி20 போட்டிகளில் விளையாடி அவற்றில் 41 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று, 199 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 110 வெற்றிகளை பெற்றுள்ளார்.

இது பற்றி பி.சி.சி.ஐ.யின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இந்திய அணியின் அனைத்து நிலைகளிலும் கேப்டனாக சிறந்த முறையில் செயலாற்றியதற்காக எம்.எஸ். தோனிக்கு ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர் மற்றும் பி.சி.சி.ஐ.யின் சார்பில் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அவரது தலைமையில், இந்திய அணி புதிய உச்சங்களை அடைந்தது. அவரது சாதனைகள் இந்திய கிரிக்கெட் வரலாற்று சாதனை பட்டியலில் எப்பொழுதும் தொடர்ந்து இருக்கும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அணியில் விளையாடுவது என்ற முடிவில் அவர் உள்ளார். அவரது இந்த முடிவினை அடுத்து டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக விராட் கோஹ்லிக்கு வாய்ப்பு உள்ளது.

Batting and fielding averages
MatInnsNORunsHSAveBFSR100504s6sCtSt
Tests9014416487622438.09824959.116335447825638
ODIs283246679110183*50.891025988.8096170519726792
T20Is736332111248*35.87909122.330075344122

Loading