கோஷ்டி பூசலால் தோற்ற திமுக டி.ஆர்.பாலு!?

ssp-and-balu

மே 18,பரபரப்பாய் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்ற திமுகவுக்கு பின்னடைவு இல்லை என்று தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த டி.ஆர்.பாலு கூறினார்.

மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர்.பாலு 1,44,119 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கு.பரசுராமனிடம் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சனிக்கிழமை அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, தமிழக மக்களவைத் தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெறவில்லை. பண நாயகமே வெற்றிபெற்றுள்ளது. இந்தத் தோல்வி திமுகவுக்கு பின்னடைவு இல்லை என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் தஞ்சையில் உள்ள கோஷ்டிப்பூசலால்தான் நீங்கள் (பாலு) தோற்றீர்களா என்று கேட்டார். அதற்கு பதில் எதுவும் கூறாமல் டி.ஆர்.பாலு சென்றார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு