jayalalitha

மாநிலங்களவைத் தேர்தலில் என். சின்னதுரைக்கு பதிலாக ஏ.கே. செல்வராஜ் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளராகவும், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளராகவும் இருந்த சின்னதுரை இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த என். சின்னதுரை, கழகத்துக்கு எதிராகவும், கழகத்தின் கட்டுப்பாடுகளை மீறியும் செயல்பட்டதாகக் கூறி கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

Loading