சிம்பு, தனுஷுடன் விஜய் புது கூட்டணி!

Vijay, Simbu and Dhanush bond over cinema

மார்ச் 12, மிட்நைட் பார்ட்டியில் விஜய், சிம்பு, தனுஷ் ஒன்றாக பங்கேற்று புதிய நட்பை ஏற்படுத்திக் கொண்டனர். சிம்பு, தனுஷ் இருவருமே மிட்நைட் பார்ட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களுக்கான நட்பு வட்டாரமும் பெரியது என்பதால் வாரத்தில் ஒரு மிட்நைட் பார்ட்டிய¤லாவது இவர்கள் பங்கேற்பார்கள். கடந்த பொங்கலுக்கு ஜில்லா படம் ரிலீஸ் ஆகும்போது விஜய்யை சந்தித்தார் தனுஷ். அப்போது ஜில்லா படம் வெற்றி பெற வாழ்த்தினார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்த ஒரு மிட்நைட் பார்ட்டியில் சிம்பு, தனுஷுடன் விஜய்யும் பங்கேற்றார். மூவரும் சேர்ந்து போட்டோக்களும் எடுத்துக்கொண்டனர். அதை சிம்பு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மிட்நைட் பார்ட்டிகளில் விஜய் அதிகம் பங்கேற்பதில்லை. ஆனால் சமீபகாலமாக அவர் இதுபோன்ற பார்ட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகிறாராம். சனிக்கிழமை பார்ட்டியில் அவர் சிம்பு, தனுஷை சந்தித்து அவர்களுடன் பார்ட்டி கொண்டாடியுள்ளார். இதன் மூலம் மூவருக்கும் இடையே புதிய நட்பு மலர்ந்துள்ளது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு