சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் நெருக்கடி

csk

7வது ஐபிஎல் போட்டிகளுக்காக நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்துகொள்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீதான சூதாட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் அமைத்த மூவர் குழு விரைவில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. இந்த அறிக்கையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருந்தால், அந்த அணிக்கான உரிமம் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், பிகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஐபிஎல் வீரர்கள் ஏலம், குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் குழுவின் விசாரணை அறிக்கை மீது உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு உட்பட்டதுதான் என பிசிசிஐக்கு உத்தரவிடவேண்டும் என்று தமது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனுவை, பிப்ரவரி 10ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வரும் 12-ஆம் தேதி, 7-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு