தடுமாறும் இந்தியா! காப்பாற்றுவாரா டோனி!

New-Zealand

இந்திய – நியூசிலாது அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 130 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருக்கிறது.

முன்னதாக நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 503 ஓட்டங்களை எடுத்திருந்தது. கேப்டன் மெக்குலம் 224 ஓட்டங்களையும், வில்லியம்ஸன் 113 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி ஆரம்ப வீரர்களை மிக வேகமாக இழந்தது. தவான் எந்தவித ஓட்டமும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார். முரளி விஜய் 26 ஓட்டங்களுடனும், புஜாரா 1 ஓட்டத்துடனும், விராத் கோலி 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

தற்போது களத்தில் ரோகித் ஷர்மா ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களுடனும், ராஹேன் 23 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர். இப்போட்டியில் இந்திய அணி சார்பில் அஷ்வின் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு