தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு தண்டனை வழங்கியது பெங்களூர் நீதிமன்றம்!

jeya   தமிழக முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா-வுக்கு பெங்களூர் நீதிமன்றம் சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. இதை 19 ஆண்டுகளாக தெள்ளத் தெளிவாக விசாரித்த நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும் 100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்து சிறையில் வைக்க அதிரடி உத்தர விட்டது. இதைத் தொடர்ந்து இன்று பெங்களூர் சிறையில் செல்வி ஜெ.ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவரோடு இணைந்து சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டவர்களுக்கும் இதே தண்டனையை கூறி சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழக முதல்வர் பதவியையும், திருச்சி ஸ்ரீரங்கம் ச.ம.உ பதவியையும் இன்று முதல் இழக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு