திருப்பதியில் பேருந்து கவிழ்ந்து பக்த்தர்கள் காயம்

tirupati-bus-accident

திருப்பதி மலைப்பாதையில் செல்போனில் பேசியபடி ஓட்டுநர் சென்றதால் பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு ஆளானது. இதில் காயமடைந்த 5-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமலை கோவிலுக்கு 45 பக்தர்களுடன் இன்று காலை ஆந்திர அரசு பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தை ரத்தினம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மலைப்பாதையின் 13-வது வளைவில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால், அப்பாதையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து ஒட்டுநர் செல்போனில் பேசியபடி சென்றதால்தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு