திருமாவின் ஆசை வார்த்தையை நம்பி வாழ்விழந்த கோவை கவிதா?

 

thirumaa

ஜூலை 8, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் ஆசை  வார்த்தையை நம்பி என் வாழ்க்கையைத் தொலைத்தேன். இப்போது என்னையும், எனது குழந்தையையும் கொலை செய்வதாக திருமாவளவன் கட்சியினர் மிரட்டுகின்றனர் என்று டிஜிபி ராமானுஜத்திடம் இளம்பெண் புகார் கொடுத்திருக்கிறார்.

கோவை மாவட்டம் கணபதியைச் சேர்ந்தவர் கவிதா (34). இவர் நேற்று மாலை சென்னையில் டிஜிபி ராமானுஜத்திடம் புகார் மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் என்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறியதை நம்பி எனது கணவரை விவாகரத்து செய்தேன். இந்நிலையில் சாதியை காரணம் காட்டி என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவில் சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தேன்.எனக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்தை விடுதலைச் சிறுத்தைகளை சேர்ந்த ஜெயந்தி, கார்த்திக் ஆகியோருக்கு அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்தேன். சில நாட்களில் அதற்குரிய பணத்தை தருவதாக கூறியவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கோவை வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு, திருமாவளவனுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், சொத்துக்கான முழு தொகையையும் பெற்றுக் கொண்டேன் என்றும் எழுதிக் கொடுக்கும்படியும், மீறினால் என்னையும், எனது 4 வயது குழந்தையையும் கொன்றுவிடுவதாக மிரட்டினார். திருமாவளவனை நம்பி எனது குடும்பத்தை இழந்துவிட்டேன். அவரது கட்சியினரை நம்பி எனது சொத்துக்களையும் இழந்துவிட்டேன். இப்போது கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே எனக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக வன்னியரசு கூறியபோது, இது எங்கள் மீது கூறப்பட்டுள்ள பொய்யான புகார். கடந்த ஆண்டுகூட இது போன்ற பொய்ப் புகாரை அந்த பெண் அளித்திருந்தார். அதில் உண்மை இருந்திருந்தால் அப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு