மார்ச் 14, கமல் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது ஒரு சர்ச்சை வருவது வழக்கமான ஒன்றுதான். தற்போது அவரின் புதிய படமான உத்தம வில்லன் போஸ்டர் பிரெஞ்சு கலைஞர் ஒருவர் கேரளாவில் எடுத்த புகைப்படம் போன்று இருப்பதாக பேசப்பட்டது.
இதைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது,
‘தெய்யம்’ என்ற பழங்கால கலை 1000 வருடங்களாக இங்குள்ளது. கலைநயத்துடன் கூடிய இந்த ஆட்டத்தை ஆடும் பாரம்பரியத்தை சேர்ந்த 3-வது தலைமுறை கலைஞர்தான் எனக்கு இந்த மேக்கப்பை போட்டார். ஒரு காதல்ஜோடி மார்பில் தலைவைத்த படி போஸ் தந்தால் அது ‘ஏக் துஜே கே லியே’ போஸ்டரின் காப்பி என்று சொல்வார்களா? உத்தம வில்லன் படத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கூத்து கலையுடன் கலந்த கலவையாக தெய்யம் நடனம் என் படத்தில் இடம்பெறுகிறது.
நான் அணிந்திருப்பது முகமூடி அல்ல. என் முகத்தின் மேல் பெயின்ட்டால் வரையப்பட்டிருக்கிறது. இதற்கு 4 மணி நேரம் ஆனது. முகத்தில் பெயின்ட்டால் மேக்கப் போடுவது சாதாரண விஷயம் கிடையாது.’ அன்று கட்டமாக பதில் அளித்தார்.
![]()

