நான் நேற்றே ஒதுங்கி விட்டேன்! டிடிவி.தினகரன்

நான் நேற்றே ஒதுங்கி விட்டேன்! டிடிவி.தினகரன்

ஏப்ரல் 19, சென்னை: அ.தி.மு.க (அம்மா) துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:

நான் நேற்றே ஒதுங்கி விட்டேன் கட்சியோ, ஆட்சியோ பலவீனப்பட நான் காரணமாக இருக்க மாட்டேன்.சலசலப்பால் கட்சி, ஆட்சிக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என உறுதியாக உள்ளேன்.நான் ஒதுங்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் என்றால், நான் ஒதுங்கி இருப்பேன். .என்னை நியமனம் செய்தவர் சசிகலா, அவரை கேட்டு அடுத்து கட்ட முடிவை எடுப்பேன்.துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக சொன்னால் விலகுவேன்.

தொண்டர்களுக்கு விரோதமாக நான் நடக்கமாட்டேன். எனக்கு ஆதரவு என தனியாக எம்எல்ஏக்கள் இல்லை. கட்சியை களங்கப்படுத்தி விடக்கூடாது.அமைச்சர்கள் இது போன்று முடிவு எடுக்க எதோ பயம் உள்ளது. அவர்களுக்கு ஏற்பட்ட பயத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை. எனக்காக தேர்தல் பணியாற்றிய அமைச்சர்களுக்கு நன்றி.கட்சியின் நலன் கருதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க அணிகள் இணைவதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஒற்றுமயாக இருக்கும்படி என்னை சந்தித்த எம்.எல்.ஏக்களிடம் கூறினேன். எனது பலத்தை நிரூக்க கூட்டம் கூட்டவில்லை.

என்னை அழைத்து இருந்தால் அந்த கூட்டத்திற்கு நானும் சென்று இருப்பேன். அமைச்சர்கள் ஆலோசனைக்கு பிறகு என்னை சந்தித்து பேசுவதாக கூறினார்கள் ஆனால் பேசவில்லை.என்னிடம் யாரும் இதுவரை விரிவாக பேசவில்லை. யாரோ சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் என்னை நீக்கபார்க்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு