நியூஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை

Malinga five cuts Pakistan short

ஏப்ரல் 01, வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில், நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி நியூஸிலாந்தை 59 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை யிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

முதலில் ஆடிய இலங்கை அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜெயவர்த்தனே 25 ரன் எடுத்தார். திரிமன்னே 20, பெரேரா 16 ரன் எடுத்தனர். இறுதியில் நியூஸிலாந்து அணிக்கு 120 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி.

தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி, துவக்கம் முதலே இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை இழந்தது. அந்த அணியில் துவக்க வீரர் வில்லியம்ஸ் 43 பந்துகளில் 42 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்ற இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். இலங்கையின் ஹெராத் 3.3 ஓவர் வீசி 3 ரன்னே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். நியூஸிலாந்து அணி 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 60 ரன்களே எடுத்து 59ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹெராத் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு