பா.ஜ.கவுக்காக நாடு முழுவதும் பிரச்சாரம் – நடிகர் எஸ்.வி.சேகர்

sv-sekar

பாரதிய ஜனதாவுக்காக இந்தியா முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யப் போகிறேன் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறிய்யுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த ஒரு திருமண விழாவில் இன்று நடிகர் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், “தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை கூட்டி உள்ளார். ஊழல் எதிர்ப்பு எண்ணம் இருப்பதால் தான் அவர் மாநாட்டை நடத்தி உள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் கூட்டணி குறித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

அவர் தேர்தலில் தனியாக நின்று போட்டியிட்டால் ஓட்டுகள் சிதறி விடும். இதனால் விஜயகாந்த் சரியான முடிவு எடுத்து பா.ஜனதா கூட்டணியில் சேர வேண்டும். ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தால் அங்கும் பிரச்சினை உள்ளது. இதனால் அந்த கட்சியுடன் சேர்ந்தால் எந்த பிரயோஜனமும் இருக்காது.

வரும் தேர்தலில் பா.ஜனதா 272 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ராகுல் காந்தி பேட்டி, பிரதமர் மன்மோகன் சிங்கின் பேட்டி அவர்களுக்கு எதிராகவே உள்ளது. இதனால் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும்.

பா.ஜனதா கட்சிக்காக நான் இந்தியா முழுவதும் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளேன். தமிழர்கள் அதிகம் உள்ள இடத்தில் பிரசாரம் செய்வேன். இதற்காக மோடியிடமும் பேசிவிட்டேன். பிரசாரம் செய்ய அழைத்தால் நிச்சயம் வருவேன்.” என்று தெரிவித்தார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு