பிரதமர்களை உருவாக்குவோம்; பிரதமராக விரும்பமாட்டோம்!ஜெயா-வை குறிவைத்து கலைஞர் தாக்கு?

thol-thiruma

 

சிதம்பரம்:12.04.2014 சனி.

சிதம்பரம் கீழரத வீதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து மு.கருணாநிதி வியாழக்கிழமை இரவு பேசியது:

நாங்கள் பிரதமர்களை உருவாக்குவோமே தவிர, பிரதமராக வர வேண்டும் என்று எண்ணுபவர்கள் அல்ல என திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.

இந்திரா காந்தி பிரதமராக வர நான் பாடுபட்டேன். ஆனால் ஜெயலலிதா, சோனியா காந்திக்கு பிரதமராகும் தகுதி கிடையாது எனக் கூறினார்.

தமிழகத் தலைவர்களும் சரி, இந்தியாவில் உள்ள தலைவர்களும் சரி நான்தான் பிரதமர் என மார்தட்டி வருகின்றனர். நாங்கள் பிரதமர்களை உருவாக்குவோமே தவிர, நாங்கள் பிரதமராக வர வேண்டும் என்று எண்ணுபவர்கள் அல்ல!

கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், தேர்தல் பொறுப்பாளர் வன்னிஅரசு, திமுக நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு