பிளட்சரை கடுமையாக சாடிய கவாஸ்கர்!

Sunil Gavaskar demands young coach for Team India

மார்ச் 11, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து தொடரில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது. இதனால் இந்திய அணியின் மீதான விமர்சனம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 65 வயதான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டன்கன் பிளட்சரை மாற்ற இது சரியான தருணம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவாஸ்கர் கூறியிருப்பதாவதுடன்கன் பிளட்சரை நீக்கி விட்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு இளம் பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய சரியான தருணம் இதுவாகும். அணியினருடன் களத்தில் இறங்கி கடுமையான பயிற்சி அளிக்க பயிற்சியாளர் தான் நமக்கு தேவையாகும். ஓரமாக உட்கார்ந்து கொண்டு பயிற்சியை வேடிக்கை பார்க்கும் பயிற்சியாளரால் அணிக்கு எந்தவித பயனும் கிடைக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே பயிற்சியாளர் பிளட்சரின் ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அவரது ஒப்பந்தம் நீடிக்கப்படுமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு