பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்!

engineering

மே2,

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாமக்கல்லில் சனிக்கிழமை (மே 3) முதல் வினியோகிக்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும் மிகுந்த பரபரப்புடன் காணப்படும் பொறியியல் சேர்க்கை இந்த ஆண்டும் குறைவில்லாமல் நடக்கும் என எதிர்பார்க்கலாம். 12ம் வகுப்பு தேர்வு முடிவு அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களின் உற்சாகம் அதிகரித்துள்ளது.

நாமக்கல் திருச்சி சாலையிலுள்ள நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெறும் இந்த விண்ணப்ப வினியோகத்தையொட்டி இம்மாவட்டத்துக்கு 4,500 விண்ணப்பங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த விண்ணப்ப வினியோகம் 20-ம் தேதி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 9 முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது.

பொது பிரிவை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்தியும், எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவ, மாணவிகள் சாதிச்சான்றிதழின் நகலை காண்பித்து ரூ.250 செலுத்தியும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த கல்லூரி முதல்வர் மங்கையர்கரசி தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு