மாயமான விமானம் இந்திய பெருங்கடலில் மூழ்கியது உறுதி செய்யப்பட்டது:மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அறிவிப்பு

malasia air

மார்ச் 25, கோலாலம்பூர், மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி, 239 பயணிகளுடன் பறந்த மலேசிய விமானம், கடந்த 8–ந்தேதி அதிகாலையில் தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியில், இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

முதன் முதலில் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் போன்ற 2 பொருட்கள் மிதப்பதாக ஆஸ்திரேலிய செயற்கைகோள் படம் பிடித்தது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 2 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவில் அந்த பொருட்கள் மிதப்பது தெரியவந்தது. சீனா மற்றும் பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள்களும் அப்பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கருதப்படும் பொருட்களை படம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டது.

இந்நிலையில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட சீன விமானப்படையின் விமானம் இல்யூஷின்-76 தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் வெள்ளை நிறத்தில் சதுர வடிவிலான பொருளை கண்பிடித்துள்ளது என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் சிங்குவா தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இன்று பாராளுமன்றத்தில் பேசுகையில் ராப் பி3 ஆர்யன் 2 பொருட்களை கண்டறிந்து உள்ளது. அதில் ஒன்று பழுப்பு நிறம் அல்லது பச்சை நிறத்திலும் வட்ட வடிவிலும் மற்றொன்று ஆரஞ்சு கலரில் செவ்வகவடிவிலும் உள்ளது. என்று கூறினார்.;இந்த காலத்தின் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்று இது அந்த மர்மத்துக்கு விடைகாணும் நெருக்கத்தில் ஆய்வாளர்கள் வந்து உள்ளனர் என குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்தபட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு