மும்மூர்த்திகளின் கலவையே கோலி – குரோவ் புகழாரம்

virat-kohli

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மானான விராட் கோலி, சச்சின், சேவாக் மற்றும் டிராவிட் ஆகிய மூவரின் கலவையாக விளங்குவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அணியை மறுகட்டமைப்பதில் கோலி கலங்கரை முக்கியமான நபராக திகழ்வதாகவும், அவர் ஆட்ட நுணுக்கங்களை விரைவாக கற்றுக்கொள்வதாகவும், நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு அவர் முன்மாதிரியாக விளங்குவதாகவும் குரோவ் கூறியுள்ளார்.

டிராவிட்டை போல தீவிரமாகவும், சேவாக்கை போல தைரியமாகவும், சச்சினை போல் அசாதாரணமாகவும் கோலி விளையாடுவதாக கூறியுள்ள குரோவ், கோலி மிக விரைவாக மாணவன் இடத்திலிருந்து ஆசிரியர் இடத்திற்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இனி மிக விரைவாக கோலி அவரது தனித்திறமையை அவரே உயர்த்திக்கொண்டு ‘மாஸ்டர்’ என்னும் இடத்தை பிடிப்பாரென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு