யுவராஜ் மீண்டு வருவார்: டோனி நம்பிக்கை!

yuvraj-singh-dhoni

மார்ச் 27, நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கிண்ண போட்டித்தொரின் ஏனைய போட்டிகளில் யுவராஜ் எழுச்சி பெறுவார் என இந்திய அணித்தலைவர் டோனி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆசியக் கிண்ணத்துக்கான இந்திய அணியில் இடம்பெறாத யுவராஜ், வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பைக்கான அணியில் அங்கம் வகிக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 19 பந்துகளை சந்தித்து 10 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்.

அதோடு, களத்தடுப்பில் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அவர் எளிதான பிடிகளைக் கூட கோட்டை விட்டார். இதையெல்லாம் பார்க்கும் போது யுவராஜ் ஒருவித நெருக்கடியில் இருப்பதாகத் தெரிகிறது.

இதுகுறித்து அணித்தலைவர் டோனி கருத்து வெளியிடுகையில்,

இருபது ஓவர் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களில் யுவராஜும் ஒருவர். ஆனால், அவர் தற்போது ஃபார்மில் இல்லை. ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின் திடீரென இருபது ஓவர் அணியில் இடம்பெற்றுள்ளார். இது அவருக்கு மனதளவில் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கும்.

யுவராஜ் தனி ஆளாக ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமை படைத்தவர். சிறந்த மேட்ச் வின்னரான யுவராஜ் இன்னும் ஒன்றிரண்டு ஆட்டங்களில் எழுச்சி பெறுவார் என தோனி தெரிவித்தார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு