ரஜினியுடன் மோடி சந்திப்பு! – மாறும் தமிழக அரசியல்..!!

ரஜினியுடன் மோடி சந்திப்பு! – மாறும் தமிழக அரசியல்..!!

modi-rajini

சென்னை போயஸ் தோட்டம்: ஏப்ரல் 13,

இந்திய மக்களாலும், உலகளாவிய அரசியல் தலைவர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய பாராளுமன்ற தேர்தல் இவர்களின் எதிர் பார்ப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் நடந்து வருகிறது.

இதில் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படும் ஆளாக பாஜக பிரதமர் வேட்பாளர் திரு நரேந்திர மோடியை வைத்துள்ளார்கள். இந்த சூழலில் இவர் முதல் முறையாக சென்னை மீனம்பாக்கத்தில் இன்று மாலை நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

இந்த பரபரப்பு சூழலில் தமிழக தேர்தலை பல முறை மாற்றி அமைத்த பெருமைக்குரிய முன்னணி நடிகர் ரஜினியை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். மோடியை ரஜினியும், அவரது குடும்பத்தினரும் வரவேற்றனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்ததாக மோடி சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

ஆனால் இதுவரை சந்திக்காத மோடி திடீரென சந்தித்திருப்பது ஏதோ ஒன்றை உணர்த்துவதாகவும், அரசியல் நோக்கம் இல்லாமல் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு