ரஜினி கமலை இயக்கபோகும் ஷங்கர்!

Rajini,Kamal,Shankar and Sun Pictures Join hands for next

பிப்ரவரி 24:  ரஜினி நடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் கமல் நடித்த இந்தியன் படத்தின் அடுத்த பாகத்தை இயக்குநர் ஷங்கர் உருவாக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம் ஷங்கரின் இந்தியன். 1996-ல் பெரும் பட்ஜெட்டில் உருவானது. அன்றைக்கு ரூ 12 கோடி செலவு செய்யப்பட்டது. அன்றைய தேதிக்கு இது மிகப் பெரிய பட்ஜெட். பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் ரூ 30 கோடி வசூலைக் குவித்தது. தேசிய விருதுகளும் கிடைத்தன.

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய இரண்டாவது படம் எந்திரன். ரூ 140 கோடி செலவில் உருவான மெகா படம் இது. 2010-ல் வெளியான இந்தப் படம் இந்திய சினிமா வரலாற்றைப் புரட்டிப் போட்டது. உலகம் முழுக்க ரூ 375 கோடிகளைக் குவித்தது இந்தப் படம்.

இந்த இரு படங்களின் இரண்டாம் பாகங்களையும் உருவாக்குவதில் முனைப்பு காட்டுகிறார் இயக்குநர் ஷங்கர். எந்திரன் 2 படத்துக்கான கதை முன்பே தயாராகிவிட்டது. இந்தப் படத்துக்கான ஷூட்டிங்கைத் தொடங்க தயாராக இருப்பதாக எந்திரனுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேல் ஏற்கெனவே கூறியது நினைவிருக்கலாம். ரஜினி உடல் நிலை காரணமாக அந்தக் கதையை தள்ளி வைத்துவிட்டு, ஐ படத்துக்குப் போய்விட்டார் ஷங்கர்.

ஐ படம் முடிந்ததும் முதலில் எந்திரன் படத்தின் 2-ம் பாகத்துக்கான பட வேலைகளை முழு வீச்சில் துவங்கவிருக்கிறார் ஷங்கர்

கோச்சடையான் படத்தை முடித்து விட்டு ரஜினி ஓய்வில் இருக்கிறார். அடுத்த படத்துக்கான கதையை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஷங்கரை சந்தித்து கதை கேட்டுள்ளார். ஷங்கர் ஐ வேலைகளை முடித்ததுமே ரஜினி நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு