ரிஸ்க் எடுங்க டோனிக்கு டிராவிட் அறிவுரை!

Dravid Favours Dhoni to Continue as Test Captain, Advises to Trust Bowlers Better

டெஸ்ட், ஒன்டே, 20&20 அணிக்கு கேப்டனாக இருக்கும் டோனி இந்திய அணியை உலக அளவில் உயர செய்துள்ளார். ஆனால் சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்க தொடர் மற்றும் நியூசிலாந்து தொடரில் படுதோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது. வெளிமண்ணில் 23 டெஸ்ட் போட்டிகளில் தலைமை ஏற்ற டோனி 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற செய்துள்ளார். 7 போட்டி டிராவிலும், 13 போட்டி தோல்வியிலும் முடிந்தது. ஆனால் உள்ளூரில் நடந்த போட்டிகளில் 21 வெற்றிகளையும், 3 தோல்வியையும், 6 டிராவையும் இந்திய அணி சந்தித்துள்ளது. தற்போது நியூசிலாந்தில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரையும் இந்திய அணி மோசமாக இழந்துள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட் கூருகைல்

வெலிங்டன் டெஸ்டில் 3வது நாள் வரை இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் அதன்பின்னர் வலுவிழந்தது போல் பணிந்தது. வெளிநாட்டில் போட்டிகளில் வெற்றி பெற கேப்டன் டோனி கொஞ்சம் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டும். முக்கியமான கட்டங்களில் தடுப்பாட்டத்தையே டோனி வெளிப்படுத்துகிறார். அணியின் பந்துவீச்சாளர்கள் மீது டோனி கூடுதலாக நம்பிக்கை வைக்க வேண்டும். தென் ஆப்ரிக்க தொடரில் டர்பனில் நடந்த டெஸ்ட் போட்டியில் 146 ஓவர் வரை புது பந்தை அவர் எடுக்கவில்லை. பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகள் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை அவரிடம் இல்லாததை இது காட்டுகிறது.

பழைய பந்தை வைத்தே ரன்களை கட்டுப்படுத்தலாம் என்று அவருடைய எண்ண ஓட்டம் இருந்துள்ளது. அதனால்தான் அவர் தடுப்பாட்டத்தை மேற்கொள்கிறார் என்று குறிப்பிட்டேன். எனவே வெளிநாடுகளில் வெற்றி பெற வேண்டுமென்றால் டோனி கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும். இந்திய அணிக்கு தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் சுற்றுப்பயணம் சவாலாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன். எஞ்சியுள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா டூரில் டோனி தன்னை நிரூபிக்க வேண்டும் என்று டிராவிட் கூறினார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு