மார்ச் 28, மிர்பூர்: டி20 உலககோப்பை குரூப் 10 சுற்றில் வங்கதேசத்தை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, வங்கதேசத்தை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி அரைசதம் அடித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
![]()

