வாரந்தோறும் புதிய இசை ஆல்பம் வெளியிட ஆசை! இசைஞானி இளையராஜா பேச்சு!

elaya2

ஜூலை 21, இசை ரசிகர்கள் இணையதளத்தில் பாடல்களைப் பதிவிறக்கம் செய்யாமல், விலைகொடுத்து சி.டி வாங்கினால், வாரம் ஓர் இசை ஆல்பம் வெளியிடத் தயார் என தேனி மாவட்டம் லோயர்கேம்பில் ரசிகர்களுக்கான கருத்தரங்கத்தில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கிடையே இளையராஜா பேசியதாவது:

ரசிகர்களுடனான முதல் சந்திப்பை நான் இங்கு வைத்துகொண்டதுக்கு காரணம், எனது தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்கள் இங்குதான் உள்ளன.ஆண்டுதோறும் எனது தாயார் இறந்த நாளில் மட்டும் இங்கு வருவேன். தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவேன்.

elayaraja

ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள், எனது பெயரில் என் அனுமதி இல்லாமல் இயங்கக்கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள், இசைஞானி பேன்ஸ் கிளப் என்ற அமைப்பில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதுபோல், ரசிகர்கள் 20 லட்சம் பேர் பதிவு செய்துள்ளீர்கள், நீங்கள் மட்டும் எனது பாடல்களை இணையதளத்தில் பதிவு இறக்கம் செய்யக்கூடாதென உறுதி மொழி எடுங்கள். நீங்கள் புதிய பாடல்கள் வேண்டுமென்று 20 லட்சம் பேர் பதிவு செய்தால், அடுத்தநாளே ஒரு ஆல்பம் வெளியிடவும், மேலும், வாரம் ஒரு ஆல்பம் வெளியிட என்னால் முடியும் என்று தெரிவித்தார்,

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு