வாழ்க்கையைப் படம் பிடிக்கும் விபச்சார பெண்களின் மகள்கள்!!

sonagachi

ஜூன்23, மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் சோனாக்கச்சி, முன்ஷிகஞ்ச் பகுதிகளில் ஏராளமான விபசார விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில் முழு நேர விபச்சார தொழிலில் ஈடுபடுகிற பெண்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

இதை கருத்தில் கொண்டு இவர்கள் மீது பரிவு கொண்டு, இவர்களது எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டுகிற விதமாக சமீபத்தில் வீடியோ படம் எடுக்க கற்பிக்கும் பயிற்சி பட்டறை நான்கு நாட்கள் நடைபெற்றன. இதில் பிரபல திரைப்பட இயக்குனர் ‘அசீம் ஆஷா’ கலந்து கொண்டு, விபச்சார அழகிகளின் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தார்.

மொத்தம் 50 பெண் குழந்தைகள் இந்த பயிற்சியைப் பெற்றனர்.

அம்மாவின் கதை

இதில் பயிற்சி பெற்ற 14 வயது சிறுமி ஒருவர் கூறுகையில், ‘‘நான் படிக்க விரும்புகிறேன். என் அம்மாவுக்கு உதவவும் விரும்புகிறேன். என் அம்மாவின் வாழ்க்கை எத்தனை கஷ்டமானது என்பதை இந்த உலகத்துக்கு காட்டுவதற்கு, அதை வீடியோ படமாக எடுக்கிறேன்’’ என தெரிவித்தார்.

இந்தச் சிறுமி தன் தாயின் வாழ்வை கதையாக்கி, படப்பிடிப்பும் முடித்து விட்டு, படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகளில் மூழ்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு