விராத் கோலி மீண்டும் முதலிடம்!

Kohli proud of team despite Pakistan defeat

மார்ச்10, இந்திய கிரிக்கெட் அணியின், ஆசியக் கோப்பை கேப்டனாக செயற்பட்ட விராத் கோலி ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நேற்று ஐசிசியின் புதிய தரவரிசை வெளியிடப்பட்டது.

இதில் தென் ஆபிரிக்க துடுப்பாட்ட வீரர் ஏபி டி வில்லியர்ஸை விட இரு புள்ளிகள் அதிகம் பெற்று விராத் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஆசிய கோப்பையில் அவர் துடுப்பெடுத்தாடிய மூன்று இன்னிங்ஸ்களிலும் 189 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 136 ஓட்டங்கள், இலங்கை அணிக்கு எதிராகப் பெற்ற 48 ஓட்டங்கள் என்பனவும் அடங்கும். கடந்த ஜனவரியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான சுற்றுத் தொடருக்கு முன்னதாக கோலி நம்பர் 1 இடத்தில் இருந்தது குறிப்பிடத்தகது. தற்போது அந்த இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். இதைவிட இந்திய அணியின் ஷேகர் தவான், 8 வது இடத்துக்கும், ரோஹித் ஷர்மா 22 வது இடத்திற்கும், ரவீந்திர ஜடேஜா 50 வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், ஆசியக் கோப்பை போட்டி நாயகனாக தெரிவானாருமான லஹிரு திரிமண், 39 வது இடத்திற்கு முதன்முறையாக வந்துள்ளார். பந்துவீச்சில், ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் ஆகியோர டாப் 20க்குள் நிற்கின்றனர். ஜடேஜா தான் விளையாடிய ஆசியக் கோப்பையின் நான்கு போட்டிகளிலும் 7 விக்கெட்டுக்கள் கைப்பற்றி, 5வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார். அஷ்வின் 14வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு