விரைவில் சிக்ஸ் பேக் அஜித்

Ajith sixpack

மார்ச் 21,  கடந்த 3 அல்லது 4 வருசமாவே பாலிவுட் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கோலிவுட்டில் வந்துவிட்டது. அதற்கேற்றார்போல் அங்கே இருக்கும் கான்களின் 6 பேக்ஸ் 8 பேக்ஸ்க்கு பதில் சொல்ல வேண்டும் என்று கோலிவுட் ஹிரோக்கள் ஜிம்மே கதியென்று இருந்தனர். பொதுவா கோலிவுட் ஹிரோக்கள் அவர்களது பேக்ஸ் பற்றி கவலைபடுவதே இல்லை இதில் ஒரு சிலர் தான் படத்திற்கு தேவை பக்கத்து வீட்டுக்காரனுக்கு தேவை என்று தேவையே இல்லாத விஷயத்துக்கெல்லாம் பட்டினியா கிடந்து அந்த வயித்தை போட்டோ எடுத்து உலகம் முழுவதும் பரப்பிவிடுவார்கள். ஆனால் அஜித்தால் மட்டுமே வரலாறு படத்தில் பார்ப்பதற்க்கும் பரமசிவன் படத்தில் பார்ப்பதற்க்கும் இடையேயான வித்தியாசத்தை பண்ண முடியும். நமக்கு எதுக்கு இந்த சிக்ஸ் பேக் என்று ஒதுங்கி இருந்தவரை நீங்க இந்த படத்துல ஜிம் பாடியா வரணும் அதுவும் 6 பேக் வயிறு இருக்கனும் என்றாராம் கௌதம் மேனன் இதற்காக பாலிவுட்டில் ஷாருக் கானின் பாடி பில்டரை சென்னைக்கே வரவழைத்துவிட்டாராம் இவர்.

 

வீட்டிலேயே ஜிம் வைத்திருப்பதால் எந்நேரமும் அங்கேயே செலவிடுகிறாராம். அஜித்திற்கு ஏற்கனவே முதுகு தண்டு பிரச்சனை இருப்பதால் அவரை அதிக வெயிட் தூக்க விடாமல் பார்த்துக்கோ அதே சமயத்தில் ரிசல்ட் நல்லா வரணும் என்று அந்த பாடி பில்டரிடம் அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தாராம் ஷாருக்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு