விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: சென்னை, திருச்சி, மதுரையில் 100 பேர் கைது

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: சென்னை, திருச்சி, மதுரையில் 100 பேர் கைது

சென்னை, மார்ச் 30: டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும் மதுரை,கோவையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை ஐஓசி அலுவலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் மத்திய அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் கொண்டுவரப்படும் திட்டங்களுக்கு எதிராகவும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் உரிய அனுமதி பெறவில்லை என்று கலைந்து செல்லுமாறு கூறினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலம் அஸ்தம்பட்டியில் செல்போன் டவரில் மாணவர்கள் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சு நடத்தினார்கள்.

இதனை ஏற்காத இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து ஐஓசி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது வலுக்கட்டாயமாக போலீசார் 50 பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து கோவையில் டவுன் ஹால் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 150 பேர் சாலையில் கூடி நின்று விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவிகள் அதிக
ளவில் இருந்ததை பார்க்க முடிந்தது.

போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறிய போது, சாலையில் அமர்ந்து பஸ் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு