வெளுத்து கட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீழ்ந்தது பாகிஸ்தான்!

west-indies

மிர்பூர்: டி20 உலககோப்பை லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் மே.இ.தீவு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள்  அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் மே.இ.தீவுகள் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியுற்றது. இதனையடுத்து மேற்கு இந்திய தீவு அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மே.இ.தீவுகள் அணி அரையிறுதியில் இலங்கையை எதிர்கொள்கிறது.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு