வேட்டிக்குத் தடைவிதித்தால் ஓராண்டுச் சிறை மற்றும் 25 ஆயிரம் அபராதம்!?

dhotis

எவை… எவை?…: பொது இடங்கள் என்பது பொதுமக்கள் பரவலாகக் கலந்து கொள்ளும் விழாக்கள், நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், இதர நிகழ்வுகள் ஆகியவை நடைபெறும் இடங்களான மனமகிழ் மன்றங்கள், உணவகங்கள், திரையரங்குகள், பெரும் வணிக வளாகங்கள், அவைக் கூடங்கள், விளையாட்டு அரங்குகள், அரசால் அறிவிக்கப்படும் இதர இடங்கள் எனப் பொருள்படும்.

ஓராண்டு சிறை: மனமகிழ் மன்றம், தனி நபர்களின் கழகம், அறக்கட்டளை நிறுவனம் அல்லது சங்கத்தால் செய்யப்பட்ட விதி, ஒழுங்குமுறை விதி, துணைவிதி அல்லது பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, அறிவுறுத்தல் வழிகாட்டு நெறி உள்பட எதுவானாலும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி அல்லது பிற இந்தியப் பாரம்பரிய உடை எதையும் அணிந்து வரும் யாரையும், அவர் அணிந்து இருக்கும் உடையைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கக் கூடாது.

இதை மீறுவோர் யாராக இருப்பினும் ஓராண்டு சிறை தண்டனை, ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும்.

விதிவிலக்கு: குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் நபர், குற்றம் தனது கவனத்துக்கு வரப்பெறாமல் நிகழ்ந்தது என்றும், குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கு தான் அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் நிரூபிக்கும் பட்சத்தில் அவரை இந்தச் சட்ட விதிகள் தண்டனைக்கு உள்ளாக்காது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு