22வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி ரஷ்யாவில் இன்று தொடங்கியது

Sochi-2014-Olympics

22வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி ரஷ்யாவின் சோச்சி நகரில் இன்று தொடங்குகிறது.

இதற்கான தொடக்க விழா இன்றிரவு நடைபெறுகிறது. வரும் 23-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் 85 நாடுகளைச் சேர்ந்த 2,900 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஐஸ் ஹாக்கி, ஸ்கேட்டிங் உள்ளிட்ட 15 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியையொட்டி சோச்சி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா, இத்தாலி, ஸ்வீடன், ஆஸ்திரியா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளன.

அவற்றில் ஆஸ்திரியா, கனடா, பின்லாந்து, நார்வே, ஸ்வீடன், அமெரிக்கா ஆகிய 6 நாடுகள் அனைத்து போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளன. இதுவரை நடைபெற்ற அனைத்து குளிர்கால ஒலிம்பிக்கிலும் அமெரிக்கா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு