Government decides to impose President's rule in Andhra Pradesh

மார்ச். 1 – ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரி்த்து தெலுங்கான மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்தது. இதற்கு சீமாந்திரா பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவி்த்து வந்தனர். எனவே இந்த மசோதா நிறைவேறாமல் இருந்து வந்தது. தெலுங்கானா மாநிலம் அமைத்தே தீர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சந்திர சேகர் ராவ் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சியை துவக்கி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இந்த பிரச்சனையில் இழுபறி நீடித்து வந்தது.

எனவே இதற்கு தீர்வு காண சோனியா காந்தி முடிவு செய்தார். இதையடுத்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்தன. மத்திய அமைச்சர்கள் குழு ஆந்திர மாநிலம் சென்று ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை மத்திய அரசிடம் அளி்த்தது. இதையடுத்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்தன.

பின்னர் மத்திய அரசு இந்த மசோதவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அவர் இதை ஆந்திர மாநில சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்புமாறு ஆந்திர அரசுக்கு அனுப்பி வைத்தார். இந்த மசோதாவை ஆந்திர முதல்வராக இருந்த கிரண்குமார் ரெட்டி கடுமையாக எதிர்த்தார். இந்த மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளன. இது மசோதாவே அல்ல. இதை ஏற்க முடியாது என்றா. பின்னர் இந்த மசோதாவை ஆந்திர மாநில சட்ட சபை நிராகரித்தது. எனவே இந்த மசோதா நிறைவேறுவதில் குழப்பம் நீடித்தது.

இந்த நிலையில் கிரண்குமார் ரெட்டி ஆந்திர மாநில முதல்வர் பதவி, காங்கிரஸ் உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். பின்னர் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். விஜயவாடா தொகுதி எம்.பி. ராஜகோபால் மிளகு பொடியை தூவி தனது எதிர்ப்பை தெரிவி்த்தார். இதனால் பல உறுப்பினர்களுக்கு கண் எரிச்சல், தும்மல் ஏற்பட்டது. தெலுங்கு தேசம் தட்சி எம்பிக்க மாரடைப்பு ஏற்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் பல எம்பிக்கள் ரகளையில் ஈடுபட்டனர். ஒரு வழியாக இரு சபைகளிலும் இந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புகல் வழங்கியதும் இது கெஜட்டில் வெளியிடப்படும்.

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்துள்ளதால் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதாவது ஆந்திர மாநில அரசின் ஆயுள்காலம் ஜூன் மாதம் முடிவடைய உள்ளது. எனவே நாடாளுமன்றத் தேர்தலுடன் , ஆந்திர சட்ட சபை தேர்தலை நடத்த முடிவு செய்தது. எனவே இந்த இடைப்பட்ட காலத்தில் யாராவது ஒருவரை முதல்வராக்குவது என்று மத்திய அரசு முடிவு செய்தது. சிரஞ்சீவி முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இதை ஏற்க தயக்கம் காட்டினார். எனவே அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து ஆந்திராவில் 356-வது சட்டப் பிரிவை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

Loading