rajapaksa

மார்ச்10, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருவதற்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகள், வளரும் நாடுகள் மத்தியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று இலங்கைக்கான ஜெனிவா தூதர் ரவி ஆர்ய சின்ஹா எச்சரித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையின் நகல், கொழும்புவில் வெளியிடப்பட்டது.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவுத் தீர்மானம், இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ள ரவி ஆர்ய சின்ஹா, ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கு முரணான நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமை ஆணையம் அனுமதிப்பது, தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒப்பந்தங்களை மீறியதற்காக இலங்கைக்கு எதிரான வரைவுத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வரும் 28-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading