ஐஸ்வர்யா தனுஷ் அவமானப்படுத்தப்பட்டாரா?- கோலிவூட்டில் பரபப்பு

aishwarya danush

மார்ச் 11, சமீப காலமாகவே ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா – சௌந்தர்யா இருவருக்குமிடையே பிரச்சனைகள்  இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

‘கோச்சடையான்’ பட விழாவில் இரண்டு பேருமே எதிரும் புதிருமாக நடந்து கொண்டது வந்திருந்த வி.ஐ.பிக்கள் மத்தியில் பெரும் புகைச்சலைக் கிளப்பியது.

ஆடியோ பங்ஷனுக்கு சிரித்த முகத்தோடு தனது கணவர் தனுஷுடன் வந்த ஐஸ்வர்யா அவருக்கான இருக்கையில் அதே புன்னகை முகத்தோடு தான் அமர்ந்திருந்தார். ஆனால் மேடையில் இருந்த தங்கை செளந்தர்யாவோ விழாவுக்கு வராதவர்களை கூட ஞாபகத்தில் வைத்து வாயார புகழ்ந்து பாராட்டினார். ஆனால் அதே மேடைக்கு எதிர் இருக்கையில் இருந்த அக்கா ஐஸ்வர்யாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

வார்த்தைக்கு வார்த்தை அப்பா, அம்மா, தனது கணவர் அஸ்வின் ஆகியோருடைய பெயர்களைத் தான் சொன்னாரே தவிர மறந்தும் கூட அக்கா ஐஸ்வர்யாவின் பெயரையோ, மச்சான் தனுஷின் பெயரையோ உச்சரிக்கவே இல்லை.

இதனால் விழா ஆரம்பித்த நொடியிலிருந்தே முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா தனது அப்பா பேசும்போது மட்டும் சில இடங்களில் சிரித்தார். மற்றபடி ஏதோ கூப்பிட்ட கடமைக்கு வந்துவிட்டு, செம கடுப்போடு தான் இடத்தை விட்டு வெளியேறினார் ஐஸ்வர்யா.

பின்னர் நடந்த ‘கோச்சடையான்’ படத்தின் பிரஸ்மீட்டில் அக்கா ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷை வைத்து ஒரு படம் டைரக்ட் செய்வீர்களா? என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலளித்த செளந்தர்யா முடிஞ்சா நீங்களே அவரோட கால்ஷீட்டை வாங்கிக் கொடுங்களேன் என்றதோடு, அவங்க வழி வேற, என்னோட வழி வேற என்றும் சொல்லி சமாளித்தார்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு