ஜி டிவியிடம் 100 கோடி நஷ்டஈடு கேட்டு டோனி வழக்கு!

msd

மார்ச் 19, ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி ஜி டிவி நிறுவனம் ரூ.100 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமென கோரி இந்திய அணியின் அணித்தலைவர் டோனி வழக்கு தொடர்ந்துள்ளார்.

6வது ஐபிஎல் தொடரில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவரான குருநாத் மெய்யப்பனும் சிக்கினார்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஜி டிவி வெளியிட்டுள்ள செய்தியில், சூதாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவர் டோனிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தியது.

இதனையடுத்து டோனி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், சூதாட்டம் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி தமக்கு எதிராக அவதூறு செய்தி பரப்பி வருகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இதனால் தமக்கு ரூ. 100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிமன்றம், அவதூறு செய்தி வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு