நெதர்லாந்தை பந்தாடிய இலங்கை!

Malinga five cuts Pakistan short

மார்ச் 25, சிட்டகாங்: டி 20 உலககோப்பை நேற்று இலங்கை – நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி 10.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து அணியில் டாம் கூப்பர் மட்டுமே ஒற்றை இலக்க ரன்னைக் கடந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இலங்கை பந்து வீச்சில் மேத்யூஸ், மென்டிஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். மலிங்கா 2 விக்கெட்டும், குலசேகரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை அடுத்து 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 40 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியில் குசால் பெரோரா 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தில்ஷான் 14, ஜெயவர்தனே 11 ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். ஆட்டநாயகன் விருது மேத்யூஸ்க்கு வழங்கப்பட்டது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு