ஈழ பின்னணியில் தயாராகும் ‘இனம்’ படம் பற்றி சந்தோஷ் சிவன்.

inam

மார்ச் 25,  மல்லி, டெரரிஸ்ட் என்று ஆரம்ப காலத்திலேயே சர்ச்சைக்குரிய பாதையில் சஞ்சரிக்க ஆரம்பித்தவர் சந்தோஷ் சிவன். அவரின் புதிய படைப்பு இனம். இலங்கை போர் பின்னணியில் அனாதைகளின் கதையைச் சொல்லும் படம். அதனாலேயே உலகத் தமிழர்கள் மத்தியில் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு. சென்சார் முடிந்து தயாராக இருக்கும் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது.
இனம் எப்படிப்பட்ட படம், அது உருவாவதற்கான விதை எங்கு கிடைத்தது என்பதைப் பற்றி சந்தோஷ் சிவனே கூறுகிறார்.

இந்த ஃபிலிம் ஸ்டார்ட் பண்ணுறதுக்கு முன்னாடி லஞ்சுக்காக ஒரு ப்ரெண்டோட வீட்டுக்கு போன போது அவங்க சிலோன் ஃபுட் எல்லாம் ப்ரிப்பேர் பண்ணியிருந்தாங்க. யாரு இதை குக் பண்ணுனதுன்னு கேட்டேன். இலங்கையிலிருந்து வந்த ஒருத்தர்தான் அதை குக் பண்ணுனதா சொன்னாங்க.

அங்க ஒரு பெண் இருந்தாங்க. அந்த பெண் எதுவுமே சொல்லலை. ஆனா அவங்க கண்ணுல ஒரு ஸ்டோரி இருந்தது. அப்போதான் ஒரு அகதி அங்கேயிருந்து இங்க வந்து கஷ்டப்பட்டுறது பற்றி யோசிச்சேன். அந்த எண்ணம் மனசைவிட்டு போகவேயில்லை. அந்த எண்ணத்தோட பயணம்தான் இந்தப் படம்.

படத்தோட கதை எதை மையப்படுத்தியது?

இந்த ஸ்டோரி முக்கியமா போகஸ் பண்ணுறது ஒரு அனாதையோட கதை. ஒரு பிரச்சனையில் அவங்களுக்கு சொந்தங்கள் எல்லாம் போயாச்சு. அவங்க ஒரு ஆனாதை இல்லத்துக்கு போகும் போது அங்க உள்ளவங்க எல்லாம் சேர்ந்து ஒரு பேமியாகுறாங்க.

எங்கேயெல்லாம் படப்பிடிப்பு நடத்தது ?

மகாராஷ்ட்ரா, திருநெல்வேலி, ராமேஸ்வரம், கேரளா அப்புறம் கொஞ்சம் ஷாட்ஸ் இலங்கையில எடுத்திருக்கு.

எங்கேயெல்லாம் படப்பிடிப்பு நடத்தது ?

மகாராஷ்ட்ரா, திருநெல்வேலி, ராமேஸ்வரம், கேரளா அப்புறம் கொஞ்சம் ஷாட்ஸ் இலங்கையில எடுத்திருக்கு.

இலங்கை யுத்த பின்னணி என்று வரும் போது நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வருமே?

ஒரு யுத்தம் காண்பிக்கும் போது இரண்டு பேரும் அவங்க சைடு ரைட்டுன்னு சொல்லிதான் பைட் பண்றாங்க. இந்த யுத்தத்துலதான் பர்ஸ்ட் டைம் போன் யூஸ் பண்ணியிருக்காங்க. ஆர்மியும் போன்ல ஷுட் பண்ணியிருக்காங்க, இவங்களும் ஷுட் பண்ணியிருக்காங்க. இதெல்லாம் எவிடென்ஸ் யூ டியூப்ல வரும்போது பிபிசி ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா ஒரு டாக்குமெண்ட்ரி எடுத்திருக்கு. அதெல்லாம் நமக்கு எவிடென்ஸ். என்ன எதிர்ப்பு வந்தாலும் படத்துல சொல்லியிருக்கிறது எல்லோருக்குமே தெரியும்.

படத்தைப் பார்த்தவங்க… குறிப்பா லிங்குசாமியின் கருத்து?

இந்த மாதிரி ஒரு படம் பண்ணும் போது நல்ல ஒரு டீம் இருக்கணும். டீம்தான் முக்கியம், பைனான்ஸுக்கு அப்புறம். படம் பார்த்த சென்சார் போர்ட் மெம்பர்ஸ் உள்பட எல்லோருமே அப்ரிசியேட் பண்ணுனாங்க. அதுல முக்கியமான அப்ரிசியேஷன் லிங்குசாமி சார் படத்தைப் பார்த்திட்டு நாமதான் டிஸ்ட்ரிபூட் பண்ணப் போறேம்னு சொன்னது. நான் ரொம்ப ஹேப்பி. படம் பண்றதுல ஒரு ஜர்னி இருக்கு. படத்தை டிஸ்ட்ரிபூட் பண்றது அப்படியில்லை. எல்லா இடத்துக்கும் கொண்டு சேர்க்கணும், காசு வேணும்… அது பெரிய விஷயம்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு