ஐபிஎல் சூதாட்டம்! பதவி விலக மறுக்கும் என்.சீனிவாசன்

N-Srinivasan

மார்ச் 26,ஐபிஎல் சூதாட்டம் வழக்கு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் பதவி விலகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் முத்கல் குழு விசாரணை நடத்தியது.

இது தொடர்பாக இந்த குழுவானது கடந்த 10ம் திகதி தனது அறிக்கையை சமர்பித்தது, அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கௌரவ உறுப்பினரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் என்.சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான ராஜ் குந்தரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சூதாட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது. இதுகுறித்து நீதிபதி பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், ஐ.பி.எல். சூதாட்ட விசாரணை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற என்.சீனிவாசன் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என்பதே எங்களது கருத்து. அவர் பதவி விலகாவிட்டால் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.

மேலும் ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முத்கல் குழு கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது, இதனால் என்.சீனிவாசன் பதவி விலகாவிட்டால் விசாரணையை நியாயமாக நடத்த இயலாது என்றும் விசாரணை குழுவின் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வெளிப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 27ம் திகதி இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு