கடலில் மிதந்த பொருட்கள் மாயமான விமானத்தின் பாகங்கள் அல்ல!

satelite

ஏப்ரல் 01, மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணி மூன்று வாரங்களாக தொடர்ந்து நடைபெற்றும் அதன் பாகங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. செயற்கைக் கோள் படங்களை வைத்து, விமான பாகங்கள் கிடப்பதாக கூறப்படும் இந்திய பெருங்கடலில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆரஞ்சு நிறத்தில் கடலில் மிதப்பதாக கூறப்பட்ட பொருட்களை ஆஸ்திரேலிய மீட்புக் குழுவினர் நேற்று நெருங்கினர். ஆனால், அவை அந்த விமானத்தின் பாகங்கள் அல்ல; மீன்பிடி உபகரணங்கள் என்பது தெரியவந்ததால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் நம்பிக்கையுடன் தேடுதல் பணியை தொடர்கின்றனர்.

விமானத்தை தேடும் பணி சிக்கலாக இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் குறிப்பிட்டார். தேடும் பணிகளை பார்வையிடுவற்காக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் புதன்கிழமை பெர்த் செல்ல உள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு