சென்னை:12.04.2014 சனி.
அம்மா குடிநீர் பாட்டில்களில் இருந்து இலைகள் ஓவியத்தை நீக்க இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, குடிநீர் பாட்டில்களில் இலைகள் ஓவியத்தை நீக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.
அம்மா குடிநீர் பாட்டில்களில் உள்ள லேபிள்களில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவின் படம், இலைகள் ஓவியத்தை அகற்றுமாறு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்தப் பாட்டில்களில் பொறிக்கப்பட்டுள்ள இலைகளும் அதிமுகவின் சின்னம் போன்று இருப்பதாகக் கூறி அதையும் அகற்ற வேண்டும் எனக் கோரி திமுக சார்பில் மீண்டும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இப்போது அம்மா குடிநீர் பாட்டில்களில் பொறிக்கப்பட்டுள்ள இரட்டை இலை ஓவியத்தை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
![]()

