குஜராத்தில் வாக்களித்த மோடி! குற்றம் கண்டுபிடித்த காங்கிரஸ்!

modi

ஏப்ரல் 30,

இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பாராளுமன்ற தேர்தல் நடந்துவருகிறது. இதில் இன்று குஜராத் காந்தி நகர் வாக்குச்சாவடியில் வாக்களித்த பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி வாக்குச்சாவடிக்கு அருகில் கட்சி சின்னத்தை வைத்திருந்தார். இதன் மூலம் அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மீம் அப்சல் கூறும் போது மோடி வாக்களித்து விட்டு விரலை காண்பித்து செய்தியாளர்களிடம் பேசும்போது தன் கையில் தாமரை சின்னத்தை வைத்திருந்தார்.

இதன் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அவர் மீறியுள்ளார். அவர்கள் தங்களை எப்போதும் “கிங்” என்றே நினைக்கிறார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்  மீம் அப்சல் கூறினார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு