மே18,மக்களவைத் தேர்தலில் வெற்றி அதிமுக எம்.பி.க்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 18) காலை 11 மணிக்கு போயஸ் கார்டனில் நடைபெறுகிறது.
16-வது மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
வெற்றி பெற்ற எம்.பி.க்களின் கூட்டம் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 37 பேரும் பங்கேற்குள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக மக்களவை குழுத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும், நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா அறிவுரை வழங்குவார் என்றும் தெரிகிறது.
ஆலந்தூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.என்.பி. வெங்கட்ராமனும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தத்து வாழ்த்து பெற இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
![]()

