மே17 இயக்கத்தின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!-உணர்வுப் பெருக்கெடுத்த மெரீனா கடற்கரை!!!

may17-bala

மே19, இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கொடுங்கோளாச்சி இனவாத சிங்கள ராஜபக்சே அரசு. இந்த அரசால் 2009 மே மாதம் முழுதும் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் பலர். இவை அனைத்தும் ஏதோ எதார்த்தமாய் நடந்தது அல்ல! திட்டமிடப்பட்ட தமிழினத்தின் மீதான கொடூர கொலைவெறித் தாக்குதல்கள். இதில் இவர்களின் கொடூர வேட்கைக்கு பலியானது விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலகன் பாலச்சந்திரன்.

இந்த கொடுமைகளின் போது செவிடாகிப் போன காதுகளுடனும் குருடாகிப்போன கண்களுடனும் மௌனம் காத்தது பல உலக நாடுகள். இதில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் இருந்த நிலை நாம் அறிந்ததே!

இவற்றையெல்லாம் மறக்க முடியாத தமிழன் ஏப்ரல்-24-2014 தேர்தலை தனதாக்கி கொண்டான். இருந்தும் வருடந்தோறும் மே18 அன்று மெரீனா கடற்கரையில் பொன்மயிலால் கண்ணகி சிலைக்கு பின்புறம் நினைவேந்தல் நிகழ்வு நடத்தி மனதை ஆறுதல் படுத்துகிறான். அதேவேளையில் எரியும் தழலில் நெஞ்சை புதுபித்துக்கொள்கிறான்.

இவ்வாறாக நேற்று நடந்த இந்த நிகழ்வில் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டு நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தினர். மறுபுறம் வீர வசன பாடல்களை ஆதி தமிழர் கலைக்குழுவினர் பாடி உணர்ச்சி பொங்க செய்தனர். இறுதியாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி வீர உரை நிகழ்த்த நிகழ்ச்சி உணர்வுப்பகிர்வுகளுடன் நிறைவுபெற்றது..

24 A3 A2 A1 5

 

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு