ஜூன்18, ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியவாறு எல்லைக்குள் ஊடுருவியுள்ளது.
மேலும் சுஷெட்பூர் ராணுவ முகாமை நோக்கியும் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயம் அடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய காலங்களில் இந்திய குறிவைத்து அதிகப்படியான தாக்குதல்கள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. இதில் சீன நாட்டு ராணுவம் லே மற்றும் லடாக் பகுதியில் ஊடுருவியது அனைவரும் அறிந்ததே!
இதற்கிடையே இந்தியாவில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து புதிய பொருளாதார கொள்கை வரும் என்ற எதிர்பார்ப்பில் மக்களும் இளைஞர்களும் எதிர்பார்க்கும் சூழலில் சீன மற்றும் பாகிஸ்தான் நாடுகள் எல்லை தாண்டும் பிரச்சினையை புதிய பிஜேபி அரசு எப்படி கையாளப்போகிறது என்பது எல்லோர் கண்களிலும் தெரியும் எதிர்பார்ப்பு!
![]()

